Sunday, February 21, 2016

தோழன் சோமேஸ்வரன் நினைவாக

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது தோழன் சோமேஸ்வரன் 4-1-1985 அன்று சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி வீர மரணமானான்.


எல்லோராலும் ”சோமேஸ்” என அன்பாக அழைக்கப்பட்ட இன் யாழ் இந்துக் கல்லூாியில் உயர் படிப்பினை முடித்து யாழ் பல்கலைக்ககை அனுமதி கிடைத்த வேளை ஈழவாின் அவலங்களை மனிதாபிமான நோக்கி பார்வையிட்ட ஈழப்புரட்சி அமைப்பின் செயற்பாடுகளினால் எமது இயக்கத்தின் முக்கிய தோழனாக மக்களுக்கான தனது பங்களிப்புகளை வேகமாகவும் மிகுந்த ஈடுப்பாட்டுடனுன் செய்து வந்தான். மாணவர் இளைஞர் பொதுமன்ற வேலைத்திட்டங்களை செவ்வனே மேற் கொண்டு வந்த எமது தோழன் சோமேஸ் அரசியல் ரீதியான வேலைகளில் பெரும் அர்பணிப்புடன் ஈடுபட்டான். தோழன் சோமேசை நாம் செவ்வணக்கங்களுடன் நினைவு கூற விளைகின்றோம்.






ப்படித்தான்
நீ
படித்துக்கொண்டிருப்பாய்
அல்லது
கிணற்றடியில் ஊத்தை விலக்கி
வாளி நீரை அனுபவித்து
வார்த்துக் கொண்டிருப்பாய்
அப்போது
படார் என
உந்தித் தள்ளி விழுத்தி
உன்னிடம் பறக்கப் பறக்க
 ஓடி வருவான்
மேல் மூச்சு கீழ் மூச்சு
 அந்தச் செய்தியைக் கூறுவான்
உன்னிடம் – நீ
அதிர்ந்து கிணற்றுக்கட்டில்
சாய்ந்து விடுவாய்
உனக்கு பழகிப் போன
சமாச்சாரம் தான்
முன் வீட்டிலும்
பக்கத்து வீட்டிலும்
நாட்களின் முன்னர்
ஏன் நேற்றே
நடந்திருக்கலாம்
உன் அண்ணன்
வீதியில்
குருதியில் நனைந்து கிடப்பான்
ஒநாய்கள் சுட்டிருப்பார்கள்
தலை நனைந்து
மண் பட்டிருக்கும்
புன்னகை மறையாது
உதட்டில் உறைந்திருக்கும்
அண்ணனின் தலை, மார்பு இப்படி
சன்னங்கள் துளைத்திருக்கும்
உனது அண்ணனின்
வீரம் சுரக்கும் மார்பில்
அம்மா கவலை சுரக்க
தலை வைத்து
அழுது கொண்டிருப்பாள்
அருகில்
அக்காளும் தங்கைகளும்
விம்மி,விம்மி சிவந்து
ஊர் கூடி நின்று
சோகத்துடன் பார்ப்பார்கள்
இது நடந்த பின்
உன்னைக்காணவே கிடைக்காது
எப்போதாவது
தாயைக் காண நீ
நடுநிசியில் வந்து
போனதாகச்

சிலர் கதைப்பார்கள்

Share this

0 Comment to "தோழன் சோமேஸ்வரன் நினைவாக"

Post a Comment